Friday, June 1, 2007

கைமணம்!?

என்னதான் பெயர்போன...பெயர்போன இல்ல பெயர்பெற்ற உணவு விடுதிக்குப் போனாலும் நம்ம வீட்டுல செஞ்சு சாப்பிடுற சுகம் இருக்கு பாருங்க அதன் சுகமும் சுவையும் தனிதான்!அது வெறும் ரசம் சாப்பாடாக இருந்தாலும் தேவாமிர்தம்!

நான் சமைத்துச் சுவைத்த உணவுவகைகளை எளிய முறையில்இங்கு தந்தால் அது யாரோ ஒரு சிலருக்கு சமைக்க,சாப்பிட உதவினால் அதுவே இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்!

சமைத்துச் சுவைத்தவர்கள் நல்லா இருந்தால்ஒருவரி
சுவை குன்றாமல் இங்கு எழுதலாம். சமைத்துருசித்தபின் இதுவெல்லாம் ஒரு கைமணமா என்று தோன்றினாலும்தோன்றியதை அப்படியே இங்கு பதிவு செய்து சகலருக்கும் ஒரு எச்சரிக்கை செய்து வைக்கலாம்!

அட, நீங்கள் இப்படிச் செய்தீர்களா? இதை இப்படிச் செய்தால்இன்னும் ருசிக்குமே என்று நினைத்தால் அதையும் இங்குநீங்கள் தாராளமாய் வாய்மணக்கச் சொல்லலாம்!